கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ளது என அதிர்ச்சிக்குரிய தகவலை தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள்.
இது குறித்து கனடாவின் அல்பெர்டா பல்கலைக்கழக, பேராசிரியர் மேத்யூ டம்பெரி கூறுகையில், ''புவி வெப்பம் அதிகரித்து வருவதால், துருவப் பகுதிகளில் உள்ள பனிமலைகள் வேகமாக உருகி வருகின்றன. இதன் விளைவாக கடல் நீர்மட்டம் உயர்வதோடு மட்டுமில்லாமல், துருவங்களின் அடர்த்தி குறைந்து, பூமியின் சுழற்சி வேகமும் குறைந்து வருகிறது. போதாக்குறைக்கு நிலவின் ஈர்ப்பு சக்தியும் பூமியை மெதுவாக சுழலச் செய்கிறது. இதனால், நாட்களும் நீளும் நிலை உருவாகியுள்ளது. இதனால் அடுத்த நூற்றாண்டில் ஒரு நாள் பொழுதில் 1.7 மில்லி நொடிகள் நீளும் என கணக்கிடப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம், கடல் நீர்மட்டம் உயர்வு போன்றவற்றின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, கடலோர நகரங்களின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் '' என்றார்.
புவி வெப்பமயாதலைக் கருத்தில் கொண்டு நாமும் சுற்றுசூழலைக் காக்கும் நடவடிக்கையில் களம் இறங்கும் காலம் வந்துவிட்டது என்பதே நிதர்சனமான உண்மை!

0 comments:
Post a Comment