புற்று நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்,
புற்று நோயால் பாதிக்கப்பட்ட 100 குழந்தைகளுக்கு நீண்ட கால அடிப்படையில்
கல்வி வழங்கிட நிதியுதவி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
டுகெதர் வீ கேன் என்ற விழிப்புணர்வு இயக்கத்தின் மூலம் நலிவுற்ற பிரிவினைச் சேர்ந்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட 100 குழந்தைகளின் 5 ஆண்டுகள் கல்விக்கான செலவுகளை ஏற்கத் தீர்மானித்துள்ளோம்.
இந்தக் குழந்தைகளை மைய நீரோட்ட வாழ்க்கைக்குக் கொண்டுவருவது எனது குறிக்கோள், இந்தத் திட்டத்தின் மூலம் உங்களது ஆதரவு மூலமும் குறைந்த வருவாய் பிரிவில் உள்ள நலிவுற்ற 100 குழந்தைகளின் 5 ஆண்டுகால கல்விக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளோம்.
என்று கூறிய யுவராஜ் சிங், தனது ட்விட்டர் பதிவில், “எனது அனைத்து சதங்களை விடவும், புற்று நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் இந்த 100 குழந்தைகளின் கல்விக்கு அளிக்கும் ஆதரவு குறித்து மிகுந்த பெருமை அடைகிறேன்” என்று கூறியுள்ளார்.
யுவராஜ் சிங்கின் இந்தத் திட்டத்துக்கு லஷ்மண், சச்சின், ஜாகீர் கான் உள்ளிட்ட வீரர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
சச்சின் தனது ட்வீட் பதிவில், “இன்னொரு சதத்துக்கு அடிக்கோலியுள்ளீர்கள். 100 புற்று நோய் பாதிப்பு குழந்தைகளுக்காக பேட் செய்வதன் மூலம் இன்னொரு சதத்துக்கு அடிக்கோலியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment