கோடம்பாக்கத்தை தாக்கி வந்த பேய் பிசாசு ஆவி சென்ட்டிமென்ட்டுக்கு வேப்பிலை அடித்து விரட்டி விடுகிற நேரம் வந்தாச்சு- முன்னணி ஹீரோக்களான விஜய்யும் சூர்யாவுமே
இப்போது டைம் மிஷின் கதையில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். புலி படத்தில் 2015 ல் இருக்கும் விஜய் 500 வருஷங்கள் பின்னோக்கி போய் ராஜா காலத்து பிரச்சனையை சால்வ் பண்ணுவது போல அமைக்கப்பட்டிருக்கிறது கதை. சூர்யாவின் 24 படத்தில் அப்பா சூர்யாவும் மகன் சூர்யாவும் சேர்ந்து கெட்டவரான வேறொரு சூர்யாவை அழிப்பதுதான் கதை. இதற்காகவும் அவர்கள் சில வருஷங்கள் பின்னோக்கி போவார்களாம். ஒரே ஒரு புதுமை...? மற்ற படங்களில் பெரிய பெரிய டைம் மெஷினில் ஏறி எல்லாரும் டிராவல் பண்ணிக் கொண்டிருக்க, கையிலிருக்கிற வாட்ச் மூலம் பின்னோக்கி போவார்களாம் சூர்யா படத்தில். எல்லாம் ஒரு அட்டம்ட்தான். சுவையா இருந்தா வெத்தல. துவர்ப்பா இருந்தா வேப்பலன்னு எடுத்துக்கிட்டு போவ வேண்டியதுதான் போலிருக்கு

0 comments:
Post a Comment