போட்டியை டிராவில் முடிக்க தென் ஆப்பிரிக்கா கடுமையாக போராடும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் தேநீர் இடைவேளைக்கு பிறகு தென் ஆப்பிரிக்காவின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய தொடங்கின. உமேஷ் யாதவ் பந்துவீச்சில் வில்லாஸ் அவுட் ஆனார். அடுத்த ஓவரிலேயே 43 ரன்கள் எடுத்திருந்த டிவில்லியர்ஸ் அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து வந்த வீரர்கள் வந்த வேகத்திலேயே பெவிலியனை நோக்கி நடையை கட்டினார்கள். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது 337 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தென் ஆப்பிரிக்கா அணி தனது கடைசி 5 விக்கெட்டுகள் 31 பந்துகளில் இழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5, ஜடேஜா 2, உமேஷ் யாதவ் 3 விக்கெட்களை வீழ்த்தினார்கள். இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த ரகானே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார்.
4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இந்த வெற்றி மூலம் இந்தியா அணி உலக டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. டெஸ்ட் தொடரை இழந்த போதிலும் டெஸ்ட் தரவரிசையில் தென் ஆப்பிரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
0 comments:
Post a Comment