சென்னையில் பெய்த கன மழையைத் தொடர்ந்து சென்னையின் முக்கியப் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமே முன் வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.சென்னையில் ஏற்பட்ட மிக கோரமான வெள்ள பாதிப்பு குறித்து, தாமாக முன் வந்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வு வழக்குப் பதிவு செய்துள்ளது.இது குறித்து வரும் 16ம் தேதிக்குள் தமிழக அரசும், மத்திய அரசும் பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பவும் அமர்வு உத்தரவிட்டுள்ளது.சென்னையில் பெய்த கன மழையின் போது முக்கிய ஏரிகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் முன்னறிவிப்பின்றி திறந்துவிடப்பட்டதே, இந்த மோசமான வெள்ள பாதிப்புக்குக் காரணம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகள் வழங்குவதில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment