ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு தமிழ்நாடு கவர்னர் ரோசய்யா பிறந்த நாள் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–
தங்களுக்கு எனது உளமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தங்களது பரந்த அறிவாற்றல், ஞானம், பொறுப்புணர்ச்சி போன்றவை நமது நாட்டின் வளர்ச்சிக்கும், இறையாண்மையை பாதுகாக்கும் ஒருமைப்பாடு மற்றும் மதசார்பின்மையை மேம்படுத்தும் ஜனநாயகத்தை வலுப்படுத்தி தேசத்தின் மரியாதையை உயர்த்தும். நாட்டுக்கு தாங்களின் சேவை மேம்பட நீங்கள் நீண்ட காலம் மகிழ்ச்சியுடனும் உடல் நலத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்.
0 comments:
Post a Comment