சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற நீலகிரி விரைவு ரயில் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 9:15 மணிக்கு மேட்டுப்பாளையத்திற்கு நீலகிரி விரைவு ரயில் புறப்பட்டது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே இந்த ரயில் சென்றுகொண்டிருந்துபோது, எஸ்-9 பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த பயணிகள் உடனே அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள், தீயை உடனடியாக அணைத்தனர். விசாரணையில் ரயில் பெட்டியின் கீழே இருந்த சக்கரத்துடன் பிரேக் உரசியதால் தீப்பிடித்தது தெரியவந்தது. பின்னர் பயணிகள் அனைவரும் மாற்று ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
0 comments:
Post a Comment