தேசியக்கொடியை அவமதித்த இளைஞரை சென்னை ராயப்பேட்டை பகுதியில் காவல்துறையினர் கைது செய்தனர்.
தேசியக்கொடியை அவமதிக்கும் வகையிலான செயலில் ஈடுபடும் இளைஞர் ஒருவரின் புகைப்படம், சமூக வலைத்தளங்களில் கடந்த 2 நாட்களாக பரவி வருகிறது. சம்பந்தப்பட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நவீன் குமார் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.
அதேபோல் இந்து மக்கள் முன்னணி சார்பில் புளியந்தோப்பு காவல்நிலையத்திலும், அகில பாரத வித்யா பரிஷத் சார்பில் மாம்பலம் காவல் நிலையத்திலும் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில் தேசியக்கொடியை அவமதித்த இளைஞர் பெயர் திலீபன் என்கிற மகேந்திரனை என்பதும், அவர் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் தனது நண்பர் வீட்டில் தங்கிருந்த மகேந்திரனை புளியந்தோப்பு காவல்துறையினர் கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
0 comments:
Post a Comment