புலி படத்தை அடுத்து இளைய தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் நடித்து வரும் தெறி படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் பர்ஸ்ட் லுக் அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் திட்டமிட்டபடி, நள்ளிரவு 12 மணிக்கு ரிலீசானது.
விஜய்யின் ‘தெறி’, படப்பிடிப்பு வேலைகள் முடியும் தருவாயில் இருக்கிறது. எனவே தெறி தேர்தலுக்கு முன்னால் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
ஏப்ரல் மாதம் தெறி படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் தேர்தல் நடைபெறலாம் என்று தெரிகிறது. தெறி படத்தில் விஜய் ஜோடிகளாக சமந்தா, எமிஜாக்சன் நடிக்கின்றனர். பிரபு, ராதிகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக நடிக்கிறார். அட்லி டைரக்டு செய்கிறார். குடும்ப கதையம்சம் கொண்ட அதிரடி படமாக தயாராகிறது.
0 comments:
Post a Comment